2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு இந்திய பிரதிநிதியாக ஸ்ரீநிவாசன்

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பதவி நீக்கப்பட்ட ஸ்ரீநிவாசன் சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதியாக தொடர்ந்தும் செயற்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவில் இந்தியன் சிமெண்ட் நிறுவன ஊழியர்கள் எவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அங்கம் வகிக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்க கூடாது என கூறவில்லை.

ஸ்ரீனிவாசனின் கடின உழைப்பே இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை சர்வதேசக் கிரிக்கெட் பேரவையில் உயர்த்தியது. எனவே அவர் தொடர்ந்தும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் இந்திய பத்திரிகை ஒன்றிக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இந்த விடயம் தொடர்பில் இதுவரை கருத்துகள் எதனையும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றது. சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விதிகளின் படி, சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராக பொறுப்பு ஏற்க்க வேண்டும் எனில்  சபை ஒன்றின் தலைவராக  இருக்க வேண்டும் என்பது  என்பது கட்டாயம் இல்லை. பிரதி நிதியாக அவர் இருந்தால் போதும். எனவே ஸ்ரீநிவாசன் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவராக பொறுப்பு ஏற்ப்பதில் தடைகள் இருக்காது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 9 ஆம், 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் பங்குபற்றுவார் என தெரிவிக்கப்பட்டுளளது. ஜூலை மாதத்தில் இந்தப் பதவியை ஸ்ரீநிவாசன் பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .