2020 நவம்பர் 28, சனிக்கிழமை

டெஸ்ட் தரப்படுத்தலில் முன்னணி பெற்ற அணிகளுக்கு பணப்பரிசு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் தரப்படுத்தலில் முன்னணி பெற்ற அணிகளுக்கு சர்வதேசக் கிரிக்கெட் சபை பணப்பரிசினை வழங்கியுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வருடத்திற்கான தரப்படுத்தலில் தென் ஆபிரிக்கா அணி முதலிடத்தைப் பெற்றிருந்தது. இதன்படி அவர்களுக்கு 475,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அதற்கான காசோலையை வழங்கினார்.

தென் ஆபிரிக்க அணி கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தரப்படுத்தலில் இரண்டாமிடத்தைப் பெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு 370,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்ட அதேவேளை, மூன்றாமிடத்தைப் பெற்ற இந்திய அணிக்கு 265,000 அமெரிக்க டொலர்களும், நான்காமிடத்தைப் பெற்ற இங்கிலாந்து அணிக்கு 160,000 அமெரிக்க டொலர்களும் அவர்களின் தரப்படுத்தல்களுக்காக சர்வதேசக் கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .