27ஆம் திகதி இரண்டு இடங்களில் இருக்கவேண்டிய கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலி, அடுத்த மாதம் 27ஆம் திகதி ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஸ்கார்பொரோவில் அடுத்த மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள யோர்க்‌ஷயர் அணிக்கெதிரான போட்டி வரைக்கும் ஜூன் மாதம் முழுவதும் சரே அணிக்காக விராத் கோலி விளையாடுவார் என சரே அணியின் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், அடுத்த மாதம் 27ஆம், 29ஆம் திகதி இடம்பெறவுள்ள அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவராக விராத் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிகளுக்கானதும் இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக்கான குழாமில் சிதார்த் கோல், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எவ்வாறெனினும் நடப்பு இந்தியன் பிறீமியர் லீக்கில் பிரகாசித்த அம்பாதி ராயுடு, ஷ்ரேயாஸ் ஐயர், குருனால் பாண்டியா, றிஷப் பண்ட் ஆகியோர் இக்குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ஷீகர் தவான், ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர், புவ்னேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்டிக் பாண்டியா, சிதார்த் கோல், உமேஷ் யாதவ்.

இந்நிலையில், சரே அணிக்காக அடுத்த மாதம் விளையாடுவதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கெதிரான இந்திய டெஸ்ட் குழாமுக்கு அஜின்கியா ரஹானே தலைமை தாங்குகிறார். விராத் கோலிக்குப் பதிலாக குழாமில் கருண் நாயர் இடம்பெற்றுள்ளதுடன், புவ்னேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

குழாம்: அஜின்கியா ரஹானே (அணித்தலைவர்), ஷீகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், செட்டேஸ்வர் புஜாரா, கருண் நாயர், ரித்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி, ஹர்டிக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா, ஷர்துல் தாக்கூர்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு இந்தியன் பிறீமியர் லீக்கில் சிறப்பாக செயற்பட்ட லோகேஷ் ராகுல், அம்பாதி ராயுடு, சிதார்த் கோல், உமேஷ் யாதவ் ஆகியோருடன் வொஷிங்டன் சுந்தரும் குழாமில் இடம்பெற்றுள்ளார். அஜின்கியா ரஹானே, மனீஷ் பாண்டே, மொஹமட் ஷமி, ஷர்துல் தாக்கூர், அக்ஸர் பட்டேல் ஆகியோர் குழாமில் இடம்பெறவுல்லை.

குழாம்: விராத் கோலி (அணித்தலைவர்), ஷீகர் தவான், ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷேரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு, மகேந்திர சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), யுஸ்வேந்திர சஹால், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்டிக் பாண்டியா, சிதார்த் கோல், உமேஷ் யாதவ், புவ்னேஷ்வர் குமார்.


27ஆம் திகதி இரண்டு இடங்களில் இருக்கவேண்டிய கோலி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.