S.Renuka / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை போகாராவில் இருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் பயணிகள் 18 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 பெண்கள் 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ் சுக்கு நூறாக உடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

39 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
59 minute ago
1 hours ago