2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

5ஆவது டெஸ்டுக்கும் 4ஆம் டெஸ்டின் குழாமையே பிரதியிட்ட இங்கிலாந்து

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டிக்கும் நான்காவது போட்டியின் குழாமையே இங்கிலாந்து பெயரிட்டுள்ளது.

இத்தொடர் முழுவதும் இங்கிலாந்தின் துடுப்பாட்டமானது குறையாகவே காணப்படுகின்றபோதும், நான்காவது டெஸ்டின் இறுதி நாளில் வெளிப்படுத்திய போராட்டம் காரணமாக துடுப்பாட்டவீரர்களுக்கு தேர்வாளர்கள் வழங்கிய இறுதி வாய்ப்பாகவே இது நோக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் உபதலைவர் பென் ஸ்டோக்ஸ், ஆரம்பத் துடுப்பாட்டவீரர் றோறி பேர்ண்ஸ் தவிர, அணித்தலைவர் ஜோ றூட் உள்ளடங்கலாக ஜேஸன் றோய், ஜொனி பெயார்ஸ்டோ, ஜோ டென்லி, ஜொஸ் பட்லர் என அனைவரும் தடுமாறியிருந்தனர்.

இந்நிலையில், நான்காவது டெஸ்டில் பந்துவீசும்போது தோட்பட்டையில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் கண்காணிக்கப்படுகையில், அவர் பந்துவீச முடியாது எனக் கருதப்பட்டால் துடுப்பாட்டவீரராக மாத்திரம் விளையாடுவதோடு, ஜேஸன் றோய்க்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் களமிறங்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

குழாம்: ஜோ றூட் (அணித்தலைவர்), ஜொவ்ரா ஆர்ச்சர், ஜொனி பெயார்ஸ்டோ, ஸ்டூவர்ட் ப்ரோட், றோறி பேர்ண்ஸ், ஜொஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோ டென்லி, ஜேக் லீச், கிரேய்க் ஒவெர்ட்டன், ஜேஸன் றோய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .