2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

திருமணத்துக்கு புறம்பான உறவால் இடைநிறுத்தப்பட்ட நீச்சல் வீரர்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருமணத்துக்கு புறம்பான உறவைக் கொண்டிருந்ததையடுத்து ஜப்பானிய நீச்சல் சம்மேளனத்தால் நான்கு தடவை உலக சம்பியனான டையோ செட்டோ, எஞ்சிய ஆண்டு முழுவதுக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஜப்பான் நீச்சல் சம்மேளனத்தின் விளையாட்டுவீரர் போன்ற நடத்தை மட்டத்தை மீறியமைக்காகவே 26 வயதான டையோ செட்டோ தடையை எதிர்நோக்கியுள்ளார்.

திருமணத்துக்குப் புறம்பான உறவை ஏற்றுக் கொண்டமையையடுத்து 200 மீற்றர், 400 மீற்றர் மெட்லி தனிநபர் நடப்பு உலக சம்பியனான டையோ செட்டோ, ஜப்பான் ஒலிம்பிக் நீச்சல் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் டையோ செட்டோ கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X