2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர்: வெளியேற்றப்பட்டார் கெனின்

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் நான்காம்நிலை வீராங்கனையான சோஃபியா கெனின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனின், 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரியை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் கனடாவின் பீலிக்ஸ் அகர் அலியாஸ்ஸிமேயை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 7-6 (7-4), 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் பிரான்ஸெஸ் தியஃபோயை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீரரான ரஷ்யாவின் டனில் மெட்வெடெவ், 6-4, 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்வை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீரரான மட்டியோ பெரெட்டனி, 6-4, 3-6, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--