Editorial / 2026 மே 21 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கபிலன் செல்வநாயகம்
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 1 இலட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று (21.05.2026) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இப்பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜராகியிருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், “சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்புக்களைக் கருத்திற்கொண்டு, இத்தகைய போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனத் தனது கடுமையான சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார். இதனை ஆராய்ந்த நீதிபதி, குறித்த பெண்ணைக் குற்றவாளியாகக் கண்டு இந்தத் தண்டனையை விதித்தார்.
மேலும், விதிக்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், குற்றவாளி மேலதிகமாக 12 மாத கால சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்குப் பல வருடங்கள் கடக்கும் தற்போதைய பொதுவான சூழலுக்கு மத்தியில், மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட நினைப்பதற்குக் கூட அஞ்சும் வகையிலான இத்தகைய கடுமையான தண்டனைத் தீர்ப்புக்கள், யாழ். பிராந்திய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதேவேளை, கடந்த வாரமும் 1.4 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரொருவருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் 7 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
21 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
36 minute ago