2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சம்பியனானார் தியெம்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்று வந்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் மூன்றாம்நிலை வீரரான டொமினிக் தியெம் சம்பியனானார்.

இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் ஏழாம்நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை வென்றே தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம் கைப்பற்றியிருந்தார்.

இதற்கு முன்னர் மூன்று தடவைகள் கிரான்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் தோற்றிருந்த டொமினிக் தியெம், 2-6, 4-6 என முதல் இரண்டு செட்களையும் ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்விடம் பறிகொடுத்திருந்தார்.

எனினும் சுதாகரித்துக் கொண்டு மூன்றாவது, நான்காவது செட்களை 6-4, 6-3 எனக் கைப்பற்றியிருந்த டொமினிக் தியெம், நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த குறித்த போட்டியின் ஐந்தாவது செட்டில் 3-5 எனப் பின்தங்கியிருந்தார்.

பின்னர் டைபிரேக்கர் வரை சென்ற குறித்த செட்டை 7-6 (8-6) எனக் கைப்பற்றி டொமினிக் தியெம் சம்பியனாகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--