2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'அடிக்கல் நாட்டியவரே திறந்துவைக்க வேண்டுமென்ற மனநிலை மாற வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியவரே திறந்து வைக்க வேண்டும் என்ற மனநிலை ஒவ்வொருவரின் மனங்களில் இருந்தும் மாற வேண்டும். அப்போதே எம்மில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'அதிகாரத்தில் இருப்பவர் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைப்பது வழக்கம். அதன் வேலைகள் முடிவுற்றதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர் மூலமே திறந்துவைக்க வேண்டும் என்று நினைப்பது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முடிக்கும் செயற்றிட்டமாகும். கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் தற்போது முடிவுற்றுள்ளது.  அவற்றை அவரே திறந்துவைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தால் அபிவிருத்தி எங்கும் இடம்பெறாது.

இன்று நான் கல்வி அமைச்சராக இருந்து மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளேன். மாகாண சபை கலைந்ததன் பின்னர் நடைபெறும் தேர்தலில் நான் தோற்று விடலாம். அப்படி நடந்தால் நானே அடிக்கல் நாட்டினேன், நானே திறந்துவைக்க வேண்டும் என்று சொல்வது தவறான கருத்தாகும். அவ்வாறு நடப்பது நாகரிகமும் அல்ல' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .