2021 மார்ச் 03, புதன்கிழமை

அபிலாஷைகளை நிறைவேற்றும் பிரதிநிதியாக திகழ வேண்டும் : ஹாபீஸ் நஸீர்

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மக்கள் பிரதிநிதிகளான அனைவரும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி போற்றப்படும் ஒரு பிரதிநிதியாகத் திகழ வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது,கிழக்கு மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து பேரும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளமைக்காக அவர்களுக்கு மாகாண சபையில்   வாழ்த்து தெரிவிக்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ள எமது உறுப்பினர்களை மக்கள் விருப்பத்துடன் அனுப்பிவைத்துள்ளமையானது மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதற்கான சான்றே தவிர வேறொன்றுமில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .