2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

'அரச காணிகள் விற்பனை தொடர்பில் கவனம் செலுத்தவும்'

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அரச காணிகளை விற்பனை செய்வது தொடர்பாக பிரதேச செயலாளர்; கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச ஒருங்கிணைப்புக்கழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (23), பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
'வாகரைப் பிரதேசத்திலுள்ள புச்சாக்கேணி மற்றும் கதிரவெளி பகுதிகளில் அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைள் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இது தொடர்பாக பொலிஸாரும் துணைபோவதாக கிராம மக்கள் என்னிடம் முறையிடுகிறார்கள்.

அரச காணிகளை விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கையெடுக்கும் அதிகாரம், பிரதேச செயலாளருக்கு உள்ளது. ஆகவே பிரதேச செயலாளர் தமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

வாகரை பிரதேசத்தில் பெரும்பாலான விவசாயிகள் வாழ்கின்றனர். இந்தப் பகுதிகிளில்  விவசாயத் திணைகளத்தினால் வழங்கப்படும் சலுகைள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இந்த விடயத்தில் விவசாய திணைக்களம் கவனம் செலுத்த வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .