2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அலுவலகம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி, பாலமுனை பிரதேச ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கிளை அலுவலகம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 6.12.2016 அன்று ஓலையினால் வேயப்பட்டிருந்த இந்த அலுவலகம் எரிந்து கொண்டிருப்பதை கண்ட அயலிலுள்ள பொது மக்கள் தீயை அணைத்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் அங்கு சென்று பார்வையிட்டதுடன், விசாரணையும் நடத்தியுள்ளனர்.

இதனால் 80,000 ரூபாய் நட்;டம் ஏற்பட்டு;ள்ளதாகவும் இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அக்கிளையின் செயலாளர் எஸ்.ஏ.எம்.றம்ஸி தெரிவித்தார்.

மார்க்க பிரசாரங்களை மேற் கொள்வது மற்றும் இரத்த தானம் செய்வது மற்றும் சமூக நல வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த நிலையம் அமைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .