2021 மே 06, வியாழக்கிழமை

அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினர்கள் 50 பேர் மு.கா.வில் இணைவு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எஸ்.எம்.ஹனீபா

மட்டக்களப்பு, கல்குடாத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் அன்வர் நௌஷாத் உட்பட 50 பேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில்  நேற்று வியாழக்கிழமை மாலை இணைந்துள்ளதாக மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்; முன்னிலையில் தாம் மு.கா.வில் இணைந்துள்ளதாக இவர்கள் அறிவித்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஷிப்லி பாறூக், ஏ.எல். தவாம், எச்.எம். லாஹிர், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .