2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஆடைத் தொழிற்பயிற்சி நிலையம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'சகோதரிகளுக்கு உதவுவோம்' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ஆயத்த ஆடைத் தொழிற்பயிற்சி நிலையத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்று சனிக்கிழமை திறந்துவைத்தார்.

இந்நிலையத்தில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு தொழிற்பயிற்சி வழங்கமுடியும் என்பதுடன்,  வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள்; செல்லக்கூடாது எனும் இலக்கை அடைவதற்காக ஆரம்பித்துள்ள தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழிற்பயிற்சி நிலையம் ஏறாவூரில் நான்காவதாகத் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் இணைப்பாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X