2021 மே 12, புதன்கிழமை

ஆரையம்பதி வைத்தியசாலைக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு

Niroshini   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களின் நன்மை கருதி மார் அறுபதாயிரம் ரூபாய்  பெறுமதியான ஐம்பது நுளம்பு வலைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

றெயின்கோ நிறுவனத்தினடம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் பிரான்சிஸ் அல்மேரா மற்றும் றெயின்கோ நிறுவனத்தின் வடக்கு, கிழக்கு மத்திய மாகாணங்களுக்கான பிராந்திய விநியோக முகாமையாளர் எம்.சுல்பி,றெயின்கோ நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதான விநியோகஸ்தர் எம்.அஹ்னாப், வடக்கு கிழக்கு விற்பனை முகாமையாளர் ஏ.றிஸ்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .