2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஆளுநருடன் மட்டு. மாநகர மேயர் சந்திப்பு

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு நகர உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

இச்சந்திப்பு, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (18) நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாநகரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள  எதிர்கால அபிவிருத்தி குறிப்பாக, நகரின் உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கியமாக நகரில் வெள்ள காலங்களில் பூரணத்துவமான வடிகான் வசதிகள் இல்லாமையால் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், மாநகர வீதிகள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, ஆளணி வெற்றிடங்களுக்கான நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக, மாநகர மேயர் சரவணபவன் தெரிவித்தார்.

இவ்விடயங்கள் குறித்து முன்னுரிமை அடிப்படையில் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளைத் தான் மேற்கொள்வதாக ஆளுநர் தன்னிடம் உறுதியளித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .