2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இடமாற்றங்கள் கோரி கவனயீர்ப்பு

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தை வதிவிடமாகக் கொண்ட வெளி மாவட்டங்களில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக, இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

நீண்டகாலமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகத் தாங்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றிவரும் நிலையில், தமக்கு இதுவரையில் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லையெனவும், புதிய அரசாங்கம் தமக்கான இடமாற்றத்தை வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு, அபிவிவிருத்தி உத்தியோகத்தர்களாக வெளி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டதாகவும் இதுவரையில் மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்ட தாங்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வருவதால் தாங்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்வதாக, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தியிடம் போராட்டத்தில் கலந்துகொண்டோர் மகஜரையும் இதன்போது கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--