Suganthini Ratnam / 2017 ஜூன் 01 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த வருடத்தின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண அலுவலகத்துக்கு 29 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என, மேற்படி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ரவீந்திரன் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளில் 5 முறைப்பாடுகள் தீர்த்து வைக்;கப்பட்டுள்ளதுடன், ஏனைய 24 முறைப்பாடுகளும் விசாரணையில் உள்ளன எனவும் அவர் கூறினார்.
பொலிஸாருக்கு எதிராகப் பொதுமக்கள் செய்த முறைப்பாடுகள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகள், பொலிஸார் செய்த முறைப்பாடுகள் என்ற வகையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பொலிஸார் இலஞ்சம் பெற்றமை, தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் இடைநிறுத்தப்பட்ட பொலிஸாரை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைக்குமாறு கோரியமை தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன எனவும் அவர் கூறினார்.
மேலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண அலுவலகமானது மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக செயற்பட்டு வருகின்றது.
இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய விரும்புகின்றவர்கள், அதை எழுத்து மூலமாக தமது அலுவலகத்தில் வார நாட்களில் தமது அலுவலக உதவி விசாரணை அதிகாரியான எஸ்.அருட்பிரகாசத்திடம் ஒப்படைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago