2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

இந்தியப் புடைவை வியாபாரிகள் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து  நீண்டகாலமாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில்; இந்தியாவைச் சேர்ந்த புடைவை வியாபாரிகள் இருவரை மட்டக்களப்பு, களுவன்கேணிப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (17) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான புடைவைகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் கிராமப் புறங்களிலுள்ள வீடுகளுக்குச் சென்று சாறி, சல்வார் உள்ளிட்ட புடைவை வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தமக்குக் தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, தேடுதல் மேற்கொண்டு இந்தச் சந்தேக நபர்களைக் கைதுசெய்ததுடன், இவர்களிடமிருந்து 37 சாரிகள், 33 சல்வார்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தென்னிந்தியா, தமிழ்நாடு, மதுரை அருப்புக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான நாகப்பன் கந்தவேல் (வயது 46), நீலமேகன் மணிகண்டன் (வயது 31) ஆகியோரே கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .