Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 22 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
முன்பள்ளிப் பருவத்திலிருந்தே இயற்கைச் சூழலையும் விவசாயத்தையும் பற்றி விளையாட்டுக் கல்வியுடன் சிறார்களுக்கு அறிவூட்ட வேண்டும் என ஏறாவூர் பிரதேச விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'போஷாக்கும் சுகவாழ்வும்' எனும் தொனிப்பொருளிலமைந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு பிரதேச சமூக சேவை நிலையத்தில் இன்று இடம்பெற்றது.இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 36 முன்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60 ஆசிரியைகளுக்காக இந்த விழிப்புணர்வுச் செயற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்மாலெப்பை நபீலா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளரும் விவசாயப் போதனாசிரியையுமான முர்ஷிதா ஷரீன் மேலும் கூறியதாவது,
முன்பள்ளிகளே சிறார்களின் முதலாவது வெளியுலகம். முன்பள்ளிகளின் அமைவிடத்தை எப்பொழுதும் தூய்மையான இயற்கைச் சூழலுடன் கூடியதாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
அங்கு செயற்கையான பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அலங்கரித்து பொய்யான உலகில் வாழவைப்பதைவிட இயற்கைப் பூஞ்செடி கொடிகளையும் கனிதரும் நிழல் மரங்களையும் கொண்டு இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் பொழுது போக்கையும் விளையாட்டோடு ஊக்குவிக்க வேண்டும்.
நஞ்சற்ற இயற்கை உணவுப் பயிர் உற்பத்திகளைப் பற்றி சொல்லித்தர வேண்டும்.
பயிர் விதைகளையும் பூஞ்செடிகளையும் சிறார்களைக் கொண்டு முளைப்பித்துக் காட்டி அது முளைப்பதையும் இலைகள் துளிர்ப்பதையும் பூத்துக் காய்த்துக் கனி தருவதையும் அத்துடன் நிழல் தருவதையும் கற்பிக்க வேண்டும்.
இயற்கையைப் பராமரிப்பதன் மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் பயன்களைப் பற்றிப் செயன்முறையில் சுட்டிக்காட்ட வேண்டும்.
முன்பள்ளிகளில் செயற்கைச் சுவையூட்டிகளுடன் கலந்த உணவுகளையும் 'அவசரத் தயாரிப்பு' உணவுகளையும் தவிர்த்து இயற்கை உணவுகளை உண்ணவும் பருகவும் ஊக்குவிக்க வேண்டும்.
இத்தகைய விளையாட்டுடன் இயற்கையோடு உள்ள சூழ்நிலைகளில் உள்ள பாடசாலைகளுக்கு வந்து கற்க பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதோடு எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த ஆளுமை கொண்ட தலைவர்களாகவும் வருவார்கள். அதற்காக முன்பள்ளிகளை இயற்கைப் பூங்காவனமாக மாற்ற வேண்டும்.' என்றார்.
1 hours ago
3 hours ago
12 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
12 Sep 2025