2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இரட்டைக்கொலை; சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரன் ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்; இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது, இவர்களை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதிப்  பிரதேசத்தில் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த  இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் பூ.பிரசாந்தன் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரரான பூ.ஹரனும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X