2021 மே 08, சனிக்கிழமை

இரண்டு வீடுகளில் திருடர்கள் கைவரிசை

Niroshini   / 2015 நவம்பர் 17 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு மூன்று பேர் பொல்லு தடிகளுடன் சென்று சட்டத்தரணி ஒருவரை தாக்கிவிட்டு அவரின் மனைவியின் சுமார் நான்கரைப் பவுண் தாலிக்கொடியை அபகரித்துச்சென்றுள்ளனர்.

வீட்டிக்கு வந்த மூன்று பேர் வெளியில் ஒளிர்ந்த மின் குமிழை அணைத்துவிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதன்போது,கொள்ளையர்களின் பல தடயப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டிப்பகுதியில் மூடியிருந்த  வீட்டின் கதவுகள் உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த நான்கு கையடக்க தொலைபேசிகள்,மூன்று பவுண் தங்க நகைகள்,பத்தாயிரம் ரூபாய் பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை(15) குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டினை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டு திங்கட்கிழமை(16) மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோதே கொள்ளையிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இவ்விரு கொள்ளைச் சம்பவங்கள் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X