2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

இல்மனைற் அகழ்வு: உண்மை நிலை என்ன?

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாகரைப் பிரதேசத்தில் கனிய மணல் (இல்மனைற்) அகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முஸ்தீவுகள் தொடர்பான உண்மை நிலையை அறியத்தருமாறு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அரசாங்க அதிபரிடம் கோரியுள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தனினால் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், இயற்கை அனர்த்தங்களாலும் வறுமையினாலும் பெரும் பாதிப்புகளை உள்ளடக்கிய வாகரைப் பிதேசம் கல்வி, கலை, கலாசார பொருளாதாரத்துக்காக நாளாந்தம் அல்லல்பட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கதிரவெளி கடலும் கடல்சார்ந்த இடங்களையும் மையப்படுத்தியதாக கனிய மணல் அகழ்வதற்கான முஸ்தீவுகளும் அதனைத் தடுப்பதற்காக மக்களின், அரசியல் தலைமைகளின் எதிர்ப்பும் தொடர்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கனியமணல் அகழ்வு தொடர்பான தற்போதைய உண்மை நிலையை திட்ட அறிக்கை, அனுமதிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அறியத் தருமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தை மேற்கொள்காட்டி, அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .