2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இல்லாமைக்கான சான்றிதழ்கள் தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

காணாமல் போனோருக்கான சான்றிதழ்கள் வழங்குவது  தொடர்பாக கிராம சேவையாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (26) மாலை நடைபெற்றது.

பதிவாளர் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு வலய உதவிப் பணிப்பாளர் நாயகம் கே.திருவருள் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. இதன்போது, கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள் விளக்கங்களை வழங்கினார்.

இக்காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கல் குறித்துக் கருத்துத் தெரிவித்த கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள், மட்டக்களப்பு மாவட்ட 14  பிரதேச செயலாளர்  பிரிவுகளில் கடமையாற்றும்  கிராம சேவை  உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இச் செயலமர்வில் இல்லாமைக்கான சான்றிதழ்களை வழங்குதல் தொடர்பான விடயங்கள், இச்சான்றிதழ்கள்; வழங்குவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன' என்றார்.

அதே நேரம், ஏற்கனவே கடந்த வாரத்தில் பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள், பதிவாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இது போன்றதொரு செயலமர்வு நடத்தபடபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பது நல்லிணக்கச் செயற்பாட்டின் முக்கியமானதொரு விடயப்பரப்பென்பதும். வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது 2010 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இறப்புப் பதிவுசெய்தல் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையில் 2016ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையும்  கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான இறப்புப்பதிவினை 3348பேர் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .