2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 10 பேர் வெற்றி

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,  பொன் ஆனந்தம்.பேரின்பராஜா சபேஷ், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.  இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் 04 பேரும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 03 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
 

அம்பாறை

பொத்துவில் தேர்தல் தொகுதியில் 17 பேர் போட்டியிட்ட நிலையில், காரைதீவைச் சேர்ந்த லோகராஜ் சுலக்சன் 1,256 வாக்குகளையும் கல்முனைத் தொகுதியில் 08 பேர் போட்டியிட்ட நிலையில், சாய்ந்தமருதைச் சேர்ந்த  எப்.எம்.டில்சாத் 743 வாக்குகளையும் சம்மாந்துறைத்; தொகுதியில் 09 பேர் போட்டியிட்ட நிலையில், அக்கரைப்பற்றைச்   ஏ.கே.நிப்ராஸ் 742 வாக்குகளையும் அம்பாறைத் தொகுதியில் 34 பேர் போட்டியிட்ட நிலையில், உகணவைச் சேர்ந்த திலால் துவிந்த 639 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இங்கு மேலதிகமாக ஒரு போனஸ் ஆசனம் கிடைக்கவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.ஜி. தாரிக்கா தமயந்தி தெரிவித்தார்.
 

மட்டக்களப்பு

கல்குடாத் தொகுதியில் 20 போட்டியிட்ட நிலையில்;, கரடியனாற்றைச்; சேர்ந்த மனோகரன் சுரேஸ்காந்தன் 3,264 வாக்குகளையும் மட்டக்களப்புத் தொகுதியில் 14 போட்டியிட்ட நிலையில், வவுணதீவு, கொத்தியாபுவைச் சேர்ந்த அருள்நாயகம் தக்ஸிக்கா 1,862 வாக்குகளையும் பட்டிருப்புத் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், மகிழுர்முனையைச்   சேர்ந்த குணரெட்னம் துசாந்தன் 1,223 வாக்குகளையும் பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

திருகோணமலை

சேரவிலத் தொகுதியில் 12 பேர் போட்டியிட்ட நிலையில், பதவிசிறிபுரவைச் சேர்ந்த அகில பிரபாத்  வீரசூரிய 655 வாக்குகளையும் மூதூர் தொகுதியில் 07 பேர் போட்டியிட்ட நிலையில், மூதூரைச் சேர்ந்த அப்துல் காதர் நபிகான்  533 வாக்குகளையும் திருகோணமலைத் தொகுதியில் 06 பேர் போட்டியிட்ட நிலையில், திருகோணமலை நகரைச் சேர்ந்த ஐயமுத்து டிலுக்ஷன் 280 வாக்குகளையும் பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரி சி.ரவிக்குமார் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .