2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஏறாவூரில் ஆறு கடைகள் உடைப்பு

Administrator   / 2016 மார்ச் 05 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு -கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள ஏறாவூர் 4 ஆம் குறிச்சி பகுதியிலுள்ள 6 கடைகள் இன்று சனிக்கிழமை அதிகாலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் நகைக் கடை ஒன்று, சில்லறைக் கடைகள் 2, தொலைத் தொடர்பு அட்டைகள் விற்கும் நிலையமொன்று, சிகை அழங்கார நிலையம் மற்றும் இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையம் என்பனவே என்பனவே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

எனினும், பொருட்கள் அங்கும் இங்கும் வீசி சேதப்படுத்தப்பட்டிருந்த போதும் பெறுமதியான உடமைகள் எவையும் திருடிச் செல்லப்படவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது ஒரு திட்டமிட்ட நாசகார செயல் எனவும்  ஒரே நேரத்தில்; ஒரே இடத்தில் தொடராக அமைந்த கடைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .