2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஏறாவூரில் மோட்டார் குண்டு மீட்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

ஏறாவூர் பொலிஸ் பிரிவு, முற்ககொட்டான்சேனை விளையாட்டு மைதானத்தில் காணப்பட்ட மோட்டார் குண்டொன்றைப் படையினர் மீட்டுள்ளனர்.

கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம், இன்று சனிக்கிழமை (24) ஸ்தலத்துக்கு விரைந்த முறக்கொட்டான்சேனைப் படையினரும் ஏறாவூர் பொலிஸாரும், இந்த மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாம் என குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .