Princiya Dixci / 2016 மே 20 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டு சொத்து மற்றும் சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை அரசாங்கம் வழங்க முன் வந்தாலும், அதற்கொன அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கிய நிதியானது போதுமானதாக இல்லை என புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவரிதனை, நேற்று வியாழக்கிழமை(19) நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவரிதனைத் தெரிவித்தார்.
சீரற்ற வானிலையின் காரணமாக நாடாளவிய ரீதியில் வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாடாளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை மீட்பதற்கான மீட்புப் பணியினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் ஜனாதிபதியும் அவர்களுக்கான உலர் உணவு மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிணை துரிதமாக செயற்படுத்தி வருகின்றார்.
அனர்த்தினால் வீடுகள், சொத்துக்களை இழந்தவர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் பணத்தினை நிவாரணமாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கென ஒதுக்கப்பட்ட நிதியானது போதுமானதாக இல்லை என இராஜாங்க அமைச்சர் முறையிட்டதுடன், மேலதிகமாக பணத்தினை ஒதுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago