2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஐவர் கைது

கனகராசா சரவணன்   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு இரு கார்களில் 16 கிலோகிராம் கேரள கஞ்சாவை விற்பனைக்குக் கொண்டுசென்ற ஐவரை, வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து, நேற்று முன்தினம் (05) இரவு கைதுசெய்ததாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து, 16 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன், கார்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த ஒருவரும் அநுராதபுரத்தைச் சேர்ந்த நால்வரும் என, ஐவரையே பொலிஸார் கைதுசெய்து, நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X