Suganthini Ratnam / 2016 மார்ச் 07 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை கஞ்சாவுடன் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் நடமாடுவதாக பொதுமக்களிடமிருந்து தமக்குக் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிகளுக்குச் சென்று சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
களுவன்கேணியிலுள்ள வீதியில் 32 வயதான ஒருவரிடமிருந்து 2800 மில்லிகிராம் கஞ்சாவும் ஓடாவியார் வீதியில் 25 வயதான ஒருவரிடமிருந்து 2000 மில்லிகிராம் கஞ்சாவும் கலைமகள் வித்தியாலய வீதியில் 26 வயதான ஒருவரிடமிருந்து 2800 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .