Suganthini Ratnam / 2016 ஜூலை 12 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 03 பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் திங்கட்கிழமை (11) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 12,200 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் குறித்த வீதியில் உலாவிக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தமக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று இச்சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது. இந்நிலையில், 20, 22, 23 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
19 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
25 minute ago