Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 20 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கடந்த காலத் தவறுகளை மன்னித்து மறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நிலைமைகள் அவ்வப்போது மாறும்” என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஸித்த தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் மரியான்தம்பி பற்ரிக் தலைமையில் நேற்று (19) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வு உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கல்வியை பணம் கொடுத்து வாங்க முடியாது. சமகால கல்வித் திட்டத்திலே, ஆரோக்கியமான உள்ளம் இருந்தால் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருக்கும்.
“நாங்கள் ஒருவர் மற்றவரில் கரிசனை கொள்ள வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். நாம் மற்றவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.
“மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கையை வீணடிக்காமல் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய விதத்தில் பயன்படுத்தி, மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
“நாம் எம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு எமது பிரதிபலிப்பைக் காட்ட முடியும். பலமுறை சிந்தித்துச் செயற்படுங்கள். ஒருபோதும் கல்வியைக் கைவிடாதீர்கள்“ என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .