2020 நவம்பர் 25, புதன்கிழமை

கடமைக்கு இடையூறு விளைவித்த இருவர் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
காத்தான்குடி நகர சபைப் பிரிவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறாக இருந்த  ஹோட்டலொன்றினதும்; பலசரக்குக் கடையொன்றினதும்   உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
 
காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்றுப் பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
இதன்போது மேற்படி ஹோட்டல் மற்றும் பலசரக்குக் கடை உரிமையாளர்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர்.

அத்துடன், குறித்த ஹோட்டலில் பாவனைக்கு உதவாத உணவுகள் காணப்பட்டதுடன், குறித்த கடையில் பழுந்தடைந்த உணவுப் பொருட்கள் காணப்பட்டதாகவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கூறினர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--