2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.சரவணன், க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம், நேற்று (05) மாலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், வெள்ளிக்கிழமை (03) மாலை கடற்கரைக்குச் சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.  இந்த நிலையில், அன்றைய தினம் அவர், வீடு திரும்பாதமையால் உறவினர்கள் அவரைத் தேடிவந்துள்ளதுடன், மறுநாள் சனிக்கிழமை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, கல்லடி சுனாமி நினைவுத் தூபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் நேற்று மாலை சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--