Administrator / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
தேசியப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்ற கவலையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை என்ற கவலையோ எனக்கில்லை.தேர்தலில் தோல்வியடைந்தாலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
என்னை பொறுத்தவரையில் தேசியப் பட்டியலில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென்று எனது வாயால் நான் யாரிடமும் கேட்கவில்லை.
எனது ஆதரவாளர்கள் அங்கு தேசியப்பட்டியலில் என்னை சேர்க்குமாறு கேட்டுச் சென்றார்கள். எல்லோரும் அதற்காக விண்ணப்பம் கொடுப்பது போன்று எனக்கும் கொடுத்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி சபை தேர்தல் வருகின்ற போது என்னைப் பொறுத்தமட்டில் எனது கட்சி மத்திய குழுவில் எடுக்கப்படும் முடிவுக்கமைய எங்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கேட்கும் பட்சத்தில் நான் அதனை பரிசீலிப்பேன்.
மக்கள் எங்களை ஏற்காததாலேயே நான் தோல்வியடைந்ததற்கான காரணமாகும். எமது கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட பலர் புதிய முகம், பழைய முகம் என்ற கருத்துக்களை கூறியமையே எனது தோல்விக்கு ஒரு காரணமாகும் என்றார்.
10 minute ago
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
28 minute ago