2021 ஜனவரி 16, சனிக்கிழமை

காத்தான்குடியில் காணிக் கச்சேரி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மாகாண காணிக் கச்சேரி, காத்தான்குடி பிரதேச செயலகத்தில், இன்று (26) நடைபெற்றது.

இக்காணிக் கச்சேரி, மட்டக்களப்பு மாவட்டச் செயலக, காணிக்குப் பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி என்முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் காணி தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள், மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தின் உதவிக் காணி ஆணையாளரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு, அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தின் உதவிக் காணி ஆணையாளர் ரவிராஜன், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர், உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, மட்டக்களப்பு கச்சேரி தலைமையகக் காணி உத்தியோகத்தர் திருமதி ஈஸ்வரன் உட்பட காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .