2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஓட்டோக்களை பதிவுசெய்தல்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டோக்களை பதிவுசெய்யும் நடவடிக்கை, இன்று (05) நடைபெற்றது.

ஓட்டோக்களை ஒழுங்குபடுத்தும் வகையிலும் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் இந்தப் பதிவு செய்யும் நடவடிக்கை நடைபெற்றது.

மஞ்சந்தொடுவாய் விளையாட்டு மைதானத்தில் இந்த பதிவு நடவடிக்கை நடைபெற்றதுடன், ஓட்டோக்களுக்கு பின்புறத்தில் ஓர் இலக்கம் பொறிக்கப்பட்டன.

காத்தான்குடி பொலிஸாரின் மேற்பார்வையில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் நடைபெற்றன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சகல ஓட்டோக்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென, காத்தான்குடி பொலிஸார், ஒலி பெருக்கியின் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--