2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கொரோனா எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 மார்ச் 10 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானையில் அமைந்துள்ள பெட்டிக்கலோ கெம்பஸ் எனப்படும் தனியார்ப் பல்கலைக்கழகத்தில், கொரோனா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தங்கவைக்கப்படுதை எதிர்த்து, பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து, இன்றைய தினம் (10) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலய மாணவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், பாடசாலையின் நுழைவாயிலை மூடி, இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வேண்டாம் வேண்டாம்; கொரோனா வேண்டாம்”, “கொண்டு வராதே கொண்டு வராதே, கொரோனாவை எங்கள் பிரதேசத்துக்குக் கொண்டு வராதே”, இனரீதியாக அழிக்கும் முயற்சியை நிறுத்து; சிறுபான்மை மக்களை இலக்கு வைக்காதே”, “எமது மாகாணத்தை அழிக்க நேசிக்கும் சதியை நிறுத்து; மக்களைக் காப்பாற்று” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, மாணவர்களும் பெற்றோரும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .