2020 நவம்பர் 25, புதன்கிழமை

கல்லடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயம்

Princiya Dixci   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (03) இரவு 10.30க்கு இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியுடன் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பாக மட்டக்களப்புப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .