Suganthini Ratnam / 2017 மே 30 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ், கடமையாற்றும் சாரதிகளை ஏனைய மாகாணங்களிலுள்ள திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களச் சாரதிகள் இன்று சுகவீன விடுமுறைப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய சுகாதார சேவைப் பிரிவுகளில் கடமையாற்றும் சாரதிகளே இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் செயலாளர் அருமைலிங்கம் பாஸ்கரன் தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் சாரதிகளை சப்பிரகமுவ, ஊவா, மேல் மாகாணம் ஆகிய மாகாண சபைகள் எழுத்து மூலமாக தமது திணைக்களங்களுக்கு உள்ளீர்த்துள்ளன' என்றார்.
'மேலும், வட மாகணசபை உட்பட இலங்கையின் ஏனைய 5 மாகாணசபைகளும் ஏனைய திணைக்களுக்கான தமது இடமாற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய முடியாது என்பதுடன், உடனடியாக இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
எனவே, எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் எமக்கு சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள சுகாதாரச் சாரதிகள், தாதியர்கள், சுகாதாரச் சிற்றூழியர்கள் ஆகிய சங்கங்களின் ஆதரவுடன் எமது போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்றார்.
சாரதிகள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவசர தேவை கருதி களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, வாகரை, படுவான்கரைப் பிரதேசங்களில் தலா ஓர் அம்பியூலன்ஸ் படி சாரதிகள் கடமையில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
30 minute ago
51 minute ago
2 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
51 minute ago
2 hours ago
26 Oct 2025