Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
செங்கலடி, கொடுவாமடுப் பிரதேசத்தில்; ஐக்கிய நாடுகள் சபையின் நிதி உதவிவுடன் அமைக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறக்கப்பட்டபோதும், அதன் செயற்பாடுகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அப்பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதால், அயல் கிராமங்களிலுள்ள மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை சேவைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சி.சிவகுமாரன் இதற்குப் பதில் அளித்தபோது, 'கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையமானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தின் முகாமைத்துவப் பகுதி இன்னும் இயங்கவில்லை. இந்நிலையம் எப்போது இயங்கும்; என்பது எமது கைகளில் இல்லை. கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சிடம் நாங்கள் கையளித்துவிட்டோம்' என்றார்.
'மேலும், மாவட்டத்தில் மூன்று நிலை நிரப்பு தளங்கள் அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டபோதும், காணிப் பிரச்சனை காரணமாக 275 மில்லியன் ரூபாய் செலவில் கொடுவாமடுப் பிரதேசத்தில்; மாத்திரமே அது அமைக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.
2 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
25 Oct 2025