Administrator / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற முரண்பாடுகளுக்குப் பின்பு அரச காணிகளிலுள்ள பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் துரித வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாலையர் கட்டு கிராமத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளர் எஸ்.லோகிதராசா, குடியேற்ற உத்தியோகஸ்தர் ஜி.ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 118 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதோடு இப்பகுதியில் காணி தொடர்பாக காணப்பட்ட 90 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் குடியேற்ற உத்தியோகஸ்தர் ஜி.ஜீவானந்தம் தெரிவித்தார்.


23 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago