2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கொத்தணி வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 25 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பிரதேச தூய்மையாக்கல் கொத்தணி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

இதற்கமைவாக இவ்வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஏறாவூர் நகர சபைப் பிரிவில் தூய்மையாக்கல் பணிகள் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

நகரங்களைத் தூய்மையாக வைத்திருத்தலுக்காக அருகிலுள்ள உள்ளூராட்சிமன்றங்களின் ஆளணி உட்பட இன்ன பிற வளங்களைப் பயன்படுத்தி பிரதேசங்களைத் துப்புரவாக்கும் கொத்தணி வேலைத்திட்டம் மிகவும் வெற்றியளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன்படி ஏறாவூர் நகர பிரதேசத்தில் தொடங்கப்பட்ட நகரைத் தூய்மையாக்கும் பணிக்காக மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்து 20 பணியாளர்களும் 4 வாகனங்களும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையிலிருந்து 9 பணியாளர்களும் மூன்று வாகனங்களும் ஏறாவூர் நகர சபையிலிருந்து 27 பணியாளர்களும் 5 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக செயலாளர் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X