2021 மார்ச் 04, வியாழக்கிழமை

காத்தான்குடி கலவரம் தொடர்பில் மேலும் மூவர் கைது

Administrator   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கலவரத்தில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மேலும் மூன்று சந்தேக நபர்களை நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்ளை நேற்று பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் முன்னியலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை இச்சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 14 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு சந்தேக நபர் கல்விப் பொதுத் ததராதர உயர் தரப் பரீட்சை எழுதும் மாணவர் என்பதால் குறித்த மாணவர் சனிக்கிழமை(22) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .