2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கூரையின் மேல் ஏறி கடதாசி ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
 
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது வீத நிலுவையும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  வெள்ளிக்கிழமை(18) தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்னால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆலையின் கூரையின் மேல் ஏறி தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாத சம்பளம் இரண்டு தடவைகளில் 70 வீதம் வழங்கப்பட்டதுடன் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளமும் 2014ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான சம்பள நிலுவை உட்பட நான்கு மாத முழுச் சம்பளமும் 30 வீத நிலுவையும் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் கடந்த 18.09.2015 தொடக்கம் ஆலைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலயே நேற்று ஆலையின் கூரையின் மேல் ஏழு ஊழியர்கள் ஏறி தங்களது சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

நாங்கள் எங்களது சம்பள நிலுவையைக் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் எங்களுக்கான எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊழியர்களின் சம்பளப்பிரச்சினையை கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று கடதாசி ஆலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .