2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குளிர்பானம் அருந்திய பிலிப்பைன்ஸ் பிரஜைகள் சுகயீனம்; இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் விடுதி ஒன்றில்; குளிர்பானம் அருந்திய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் பிரஜைகள் இருவர் சுகயீனம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட 02 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, திங்கட்கிழமை (11) உத்தரவிட்டார்.

குறித்த விடுதியில் சனிக்கிழமை (08) இரவு வழங்கப்பட்ட குளிர்பானத்தை  23, 25 வயதுகளையுடைய இப்பெண் பிரஜைகள் இருவரும் அருந்தியுள்ளனர். இதன் பின்னர், இவர்கள் மயக்கம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குறித்த ஹோட்டல் உரிமையாளரையும்  இப்பெண்களுக்கு குளிர்பானம் வழங்கியதாகக் கூறப்படும் ஒருவரையும் திங்கட்கிழமை (11) மாலை  கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து இப்பெண்களுக்கு வழங்கி அவர்கள் மயக்கம் அடைந்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும், இது தொடர்பான மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெறவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X