2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் தொண்டராசிரியர் நிரந்தர நியமனம்

Princiya Dixci   / 2016 ஜூலை 17 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பைஷல் இஸ்மாயில் 
கிழக்குமாகாண தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மாகாணசபையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண முதலைமைச்சர் செய்லாப்தீன் நஸீர் அஹமட், சனிக்கிழமை (16) தெரிவித்தார். 

வியாழக்கிழமை (14) நடைபெற்ற கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'கிழக்கு மாகாணத்தில், 445 தொண்டராசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களில் தமிழ்மொழி மூலமானவர்கள் 411 பேரும், சிங்களமொழி மூலமானவர்கள் 19 பேரும் தேசிய பாடசாலைகளைச் சேர்ந்த 15 பேரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.  மாகாணசபையானது இவர்களது நிரந்தர நியமனத்துக்கான அனுமதியினைத் தந்த போதும், கல்வியமைச்சு அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்,' எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .