2021 மார்ச் 06, சனிக்கிழமை

‘சட்ட வைத்திய அதிகாரி இல்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூலை 25 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கடந்த ஒரு மாதகாலமாக சட்ட வைத்திய அதிகாரி கடமையில் எவரும் இல்லையொன, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை தெரிவித்தார்.

ஏற்கெனவே கடமை புரிந்து வந்த சுரங்க பெரேரா, சட்ட வைத்தியத்துறையில் உயர் கல்வியைக் கற்பதற்காக, கடந்த ஜூன் மாத இறுதியில் கனடா சென்று விட்டதன் பின்னர், இவ்வெற்றிடம் இன்னமும் நிரப்பப்படவில்லை.

சட்ட வைத்திய அதிகாரிக்கான வெற்றிடம் குறித்து தான் உடனடியாக சுகாதார அமைச்சுக்கு அறிவித்து நடவடிக்கை எடுத்ததன் பேரில், கண்டி பொது வைத்தியசாலையிலிருந்து பதிலீடாக ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கடமையைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் தனக்கு சுகாதார அமைச்சிலிருந்து அறிவிக்கப்பட்டதாக, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தாரி.

ஆனால், பதிலீடாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி, இன்னமும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடமைக்கு வரவில்லை.

இதேவேளை, கடந்த ஒரு மாத காலமாக நீதிமன்ற உத்தரவுக்கமைந்த மருத்துவ உடற் கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலங்களை, குருநாகலுக்கு அனுப்பி சட்ட வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த வைத்திய அத்தியட்சகர், பொதுமக்களினதும் அதிகாரிகளினதும் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக, மட்டக்களப்புக்கு நிரந்தரமாக சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .