2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

’சமுர்த்தி வங்கிகளில் ரூ.5 இலட்சம்வரை கடன்’

Suganthini Ratnam   / 2017 மே 30 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

சமுர்த்தி வங்கிகளில் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள மக்களின் சேமிப்புப் பணம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் பி.குணரட்ணம், இந்த வங்கிகளிலிருந்து பயனாளிகள் 5 இலட்சம் ரூபாய்வரை கடன்; பெற முடியும் எனவும் கூறினார்.

கூடிய சேமிப்பில்; முதல் 3 இடங்களைப் பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நினைவுச்சின்னங்கள்; மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு, மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'பயனாளிகளுக்கு சமுர்த்தி வங்கியால் வழங்கப்படும் கடன், கிரமமாக அறவிடப்பட வேண்டும். அறவிட முடியாக் கடன் என நிலுவை இல்லாமல் இருப்பதற்கான கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

'மேலும், கிராமப்புறங்களில் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் செயற்பாட்டால், சமூகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள' என்றார்.

'இந்த நாட்டில் 52 சமுர்த்தி வங்கிகள் 'ஏ' தரத்தில் உள்ளன. 2017ஆம் ஆண்டில் மேலும் 15 வங்கிகளை 'ஏ' தரத்தில் உள்வாங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 13.5 மில்லியன் சேமிப்பைக் கொண்டுள்ள புளியந்தீவு வங்கியும் முதலிடத்தைப் பெற்றுள்ளதால் 'ஏ' தரத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X